23,Nov 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

105 வயதில் 4-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி மரணம்

கொல்லம் பிராக்குளத்தில் 1914-ம் ஆண்டு பிறந்த மூதாட்டி பாகீரதியம்மா தனது 9-வது வயதிலேயே பள்ளி படிப்பை கைவிட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பிராக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாகீரதியம்மா. 107 வயதான இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 105-வது வயதில் கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய 4-ம் வகுப்பு தேர்வை எழுதினார்.

அவர் அந்த தேர்வில் 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். உலகிலேயே 105 வயதில் இந்த தேர்வை எழுதியவர் என்ற சாதனையை மூதாட்டி பாகீரதியம்மா படைத்தார். இதனால் அவருக்கு மத்திய அரசின் ‘நாரிசக்தி விருது’ வழங்கப்பட்டது.

மூதாட்டி பாகீரதியம்மாவை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசினார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மூதாட்டி பாகீரதியம்மா நேற்று முன்தினம் நள்ளிரவு மரணம் அடைந்தார். அவரது உடல் வீட்டு தோட்டத்தில் அரசு மரியாதையுடன் நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது.

கொல்லம் பிராக்குளத்தில் 1914-ம் ஆண்டு பிறந்த மூதாட்டி பாகீரதியம்மா தனது 9-வது வயதிலேயே பள்ளி படிப்பை கைவிட்டார். அதன் பிறகு அவரால் படிப்பை தொடர முடியவில்லை. இந்நிலையில் தான், தனது 105-வது வயதில் 4-ம் வகுப்பு தகுதிதேர்வில் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




105 வயதில் 4-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு