30,Apr 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொடர்பான ஆரம்ப கூட்டம் கடுக்காமுனை பகுதியில் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் கடுக்காமுனை குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கு 300 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 4 கண்டங்களுக்கு அதாவது கடுக்காமுனை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி மற்றும் படையாண்டகுளம் ஆகிய கண்டங்களுக்கு எத்தனை ஏக்கர் நிலப்பரப்பு தேவை என்பதனை விவசாயிகளிடம் இருந்து முன்மொழிவுகளைபெற்று நிலப்பரப்புக்களை 4 கண்டங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் கடுக்காமுனை, பண்டாரியாவெளி மற்றும் படையாண்டவெளி ஆகிய கண்டங்களுக்கு தலா 90 ஏக்கர் நிலப்பரப்பும் படையாண்டகுளம் கண்டத்திற்கு 30 ஏக்கர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு விதைக்கப்படும் நெல்லினம் விதைப்பு ஆரம்ப மற்றும் முடிவு திகதி தண்ணீர் விடும் திகதி உழவுக்கூலி ஏக்கருக்கான அறுவடைக்கூலி என்பற்றுக்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு ஏகமனதாக அனைத்து கண்ட விவசாயிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பணிப்புரைக்கு அமைய மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபாலசிங்கம், பிரதேச நீர்ப்பாசண பொறியியலாளர் சுபாகரன், பட்டிருப்பு பிரிவு உதவியாளர் மதியழகன், கமநலதிணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெகநாத், பட்டிப்பளை பிரதேச செயலாளர் தட்சனகௌரி தினேஸ், பட்டிப்பளை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகன், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் புஸ்பலிங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கட்பட்ட பகுதி விவசாயிகள் அகியோர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு