சீன தைஃபேயின் நின்-சின் சென்-ஐ காலிறுதியில் 4:1 என வீழ்த்தி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா.
குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தைஃபேயின் நின்-சின்-சென்னை எதிர்கொண்டார்.
இதில் லோவ்லினா 4:1 (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..