15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

ஒரே நாளில் 4 மொழிகளில் வெளியாகும் நயன்தாரா படம்

நடிகை நயன்தாரா, தென்னிந்திய அளவில் பிரபலமானவர் என்பதால், அவர் நடித்துள்ள படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்துள்ளார். 'அவள்' படத்தின் இயக்குனரான மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் நடிகை நயன்தாரா, கண் பார்வையற்ற பெண் வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் பிரபலமானவர் என்பதால், இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட உள்ளனர். 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஒரே நாளில் 4 மொழிகளில் வெளியாகும் நயன்தாரா படம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு