தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே. படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவி, அதன் பிறகு தற்போது மீண்டும் தமிழில் கவனம் செலுத்த இருக்கிறார்.
மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் தனுசுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே. படங்களில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார். தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, ராணாவுடன் விராட பருவம், நானியுடன் ஷியாம் ஷிங்க ராய் ஆகிய 3 படங்கள் கைவசம் உள்ளன. பவன் கல்யாணுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் 2019 மே மாதம் வெளியான என்.ஜி.கே படத்துக்கு பிறகு சாய்பல்லவிக்கு படங்கள் இல்லை. முழுக்க தெலுங்கு படங்களிலேயே கவனம் செலுத்தினார். இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வருகிறார். கதாநாயகியை மையமாக வைத்து தயாராகும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். சாய்பல்லவியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..