கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்து தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை உத்தரவு பெற்றுள்ளார்
இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட ரூ.60.66 லட்சம் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நுழைவு வரியில் 50 சதவீதத்தை செலுத்தும்படி தனுசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி அவர் 50 சதவீத வரி தொகையை செலுத்தி தன்னுடைய சொகுசு காரை பதிவு செய்து கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (வியாழக்கிழமை) ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..