சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன், தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானவர் சின்னி ஜெயந்த். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் ஸ்ருஜன் ஜெய், கடந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தினார்.
இதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ருஜன் ஜெய், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஸ்ருஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..