தனுஷ் - மித்ரன் ஜவகர் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் மித்ரன் ஜவகர். இவர் தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் ஒப்பந்தமாகி உள்ளனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் தனுஷ் நடிக்கும் 44-வது படம் இதுவாகும். தற்காலிகமாக ‘டி44’ என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமர்ஷியல் படமாக இது தயாராக உள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..