15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அவரது சமாதியில், “தமிழ் சமுதாய வளர்ச்சிக்கான இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் வென்று காட்டுவோம்” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மெரினா கடற்கரைக்கு வந்தார். முதலில் அண்ணா நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பொன்முடி, ஐ.பெரியசாமி, செந்தில்பாலாஜி, பெரிய கருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தொண்டர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து அஞ்சலி செலுத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லம், அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்று கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு