பீஸ்ட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இவர் இதற்கு முன்னர் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..