பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஷபீர் நடித்த டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.
இந்நிலையில், 3-வது வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமீபத்தில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..