குட்டை முடி அலங்காரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் 3 முதல் 6 வாரங்களுக்குள் தவறாமல் முடியை கத்தரிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
தலை முடி நீளமாக வளர்வதில்லை என்ற வருத்தம் நிறைய பேருக்கு இருக்கிறது. அந்த குறையை போக்க விதவிதமான கூந்தல் அலங்காரங்களை முயற்சித்து பார்க்கிறார்கள். கழுத்து பகுதியை ஒட்டிய நிலையிலோ, ஆண்களை போலவோ கூந்தலை குட்டையாக கத்தரித்து ஸ்டைலாக வலம் வரும் இளம் பெண்களும் இருக்கிறார்கள்.
கூந்தல் நீளமாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும் போதிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான ஷாம்பு அல்லது கண்டிஷனரை தேர்ந்தெடுப்பது முதல் உச்சந்தலை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது வரை முடி பராமரிப்பில் பல விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.
கூந்தலை குட்டையாக கத்தரித்துவிட்டால் அதிக பராமரிப்பு தேவைப்படாது என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. குட்டை தலைமுடியை பராமரிப்பது எளிதுதான் என்றாலும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குட்டை முடி அலங்காரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் 3 முதல் 6 வாரங்களுக்குள் தவறாமல் முடியை கத்தரிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில் மற்ற கூந்தல் ஸ்டைல்களை விட குட்டை முடிக்கு ‘டிரிம்மிங்’ அதிகம் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் தலைமுடியின் நீளத்தை கவனத்தில் கொண்டு எவ்வளவு நீளத்திற்கு டிரிம்மிங் செய்தால் நன்றாக இருக்கும் என்பதை சிகை அலங்கார நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கூந்தலை வெப்பம் அடைய செய்யும் சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.
குட்டை முடிக்கு சீப்போ, கூந்தல் பிரஸோ அதிகம் தேவைப்படாது. அவை முடியில் சிக்கல் விழுவதற்கு காரணமாகிவிடவும் கூடாது. சில சமயங்களில் விரல்களை பயன் படுத்தியே கூந்தல் அலங்காரத்தை மெருகேற்றிக்கொள்ளலாம். சீப்புக்கு பதிலாக ‘பிரிஸ்டல் பிரஸ்’ எனப்படும் அதிக நெருக்கம் இல்லாத இழைகள் கொண்ட பிரஸை உபயோகிக்கலாம்.
குட்டை முடி என்பதால் குளியலுக்கு பின்பு கூந்தலை உலர வைப்பது எளிது. எனினும் கூந்தலை கழுவுவதற்கு வெவ்வேறு நடைமுறைகளை பரிசோதித்து பார்க்கலாம். சிலர் முடியின் நீளம் குறைவாக இருப்பதால் குறைந்த நீரிலேயே கழுவுவார்கள். அப்படி கழுவுவது தலை முடிக்கு உகந்ததா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். அதேபோல் முடியின் நீளம் குறைவாக இருந்தாலும் உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தி ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே அதற்கேற்ப கூந்தலை கழுவும் வழக்கத்தை பின்பற்றுவது நல்லது.
தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்யும்போது ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஏனெனில் குட்டை முடிக்கு கண்டி ஷனரின் பயன்பாடு அதிகம் தேவையில்லை. ஷாம்புவை அதிகம் பயன்படுத்துவது உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். முடியும் உலர்வடையக்கூடும். குட்டை முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை குறைவாக பயன்படுத்துவதே போதுமானது.
உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை கொள்வது கூந்தல் பராமரிப்பு முறையின் முக்கிய அங்கமாகும். தலைமுடியின் நீளத்தை குறைத்தால் உச்சந்தலையில் அதிக கவனம் செலுத்த தொடங்குங்கள். ரசாயன பயன்பாடு அதிகம் கொண்ட அழகு மற்றும் கூந்தல் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஹேர் ஜெல் உபயோகிப்பது கூந்தலுக்கு அழகு சேர்க்கும். ஆனால் அது உச்சந்தலையில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும். அதனை தவிர்க்க கூந்தலுக்கு அடிக்கடி மசாஜ் செய்யும் வழி முறையை பின்பற்றுவது நல்லது. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவது கூந்தல் அழகுக்கும் வழிவகுக்கும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..