19,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

செம்மொழி தமிழ் விருது, புதிதாக 6 மீன்பிடி துறைமுகம்

சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

* தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு

* காவல் துறையிலுள்ள 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

* தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழக காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு

* உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு

* மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி நிதி ஒதுக்கீடு

* மீனவர்கள் நலனுக்கு 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* புதிதாக 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்

* சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

* 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.

* ரூ.400 கோடி ஒதுக்கீட்டில் தூய்மை பாரதம் இயக்கம் செயல்படுத்தப்படும்

* 100 நாள் வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




செம்மொழி தமிழ் விருது, புதிதாக 6 மீன்பிடி துறைமுகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு