07,May 2024 (Tue)
  
CH
சினிமா

தெலுங்கு நடிகருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. 

பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், விக்ரம், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் ‘அஞ்ஞாதவாசி’, ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’ போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தெலுங்கு நடிகருடன் கூட்டணி அமைக்கும் அனிருத்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு