05,Dec 2024 (Thu)
  
CH
சினிமா

தோனி பிரதமர்... விஜய் முதல்வர் - ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு நேற்று திடீர் விசிட் அடித்த கிரிக்கெட் வீரர் தோனி அங்கு நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார்.

நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதே பகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் நேற்று நடந்தது. 

அப்போது விஜய்யும் - தோனியும் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தேசிய அளவில் டிரெண்டாகின.

இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆளப்போகும் மன்னர்கள் என்ற பெயரில் தோனியை பிரதமராகவும், விஜய்யை முதல்வராகவும் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் - தோனி சந்திப்பை அரசியலாக்கும் விதமாக அமைந்துள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தோனி பிரதமர்... விஜய் முதல்வர் - ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு