தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தி.மு.க. அளித்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வந்த நிலையில் முதல்வர் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. அதில் நீட்தேர்வை திரும்பப்பெறுவது, பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது, நகைக்கடன் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அடங்கும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 100 நாட்களை கடந்த நிலையில் பல்வேறு வாக்குறுதிகள் குறித்து தி.மு.க. அறிவிப்பு வெளியிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது ‘‘எங்களது வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நகைக்கடன், விவசாயக் கடன்களில் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடன்களில் நடந்துள்ள மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார்.
மேலும் ‘‘இலவச செல்போன், இலவச மினரல் வாட்டர் போன்ற அ.தி.மு.க.வின் வாக்குறுதிகள் என்னாச்சு?’’ என எதிர்க்கட்சியை நோக்கி கேள்வி எழுப்பினார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..