கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷெரின், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், விரைவில் நலம் பெறுவேன் எனவும் ஷெரின் கூறியுள்ளார்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷெரின் ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..