09,May 2025 (Fri)
  
CH
சினிமா

‘துக்ளக் தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

அரசியல் கதையம்சம் கொண்டு உருவாகி உள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘துக்ளக் தர்பார்’. புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். 

அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 18-ந் தேதி மாலை 6 மணிக்கு ‘துக்ளக் தர்பார்’ படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், இப்படத்தை நேரடியாக டி.வி.யில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




‘துக்ளக் தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு