22,May 2025 (Thu)
  
CH
உலக செய்தி

ஆப்கானிஸ்தான் திரும்பினார் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானி பராதர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்த அமைப்பின் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானி பராதர் நாடு திரும்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நகரங்களையும் பிடித்து வந்த தலிபான்கள், இறுதியாக காபூல் நகரை பிடித்து ஆட்சியை பிடித்தது. ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தலிபான் அமைப்பின் துணைத்தலைவரும், நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவி ஏற்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில் ‘‘எங்களுடைய அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு ஒரு உறுதியை அளிக்க இருக்கிறோம். அதாவது, எங்களுடைய பகுதியை உலகின் எந்தவொரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்தமாட்டோம். அதேபோல், எங்கள் மண்ணிலிருந்து உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதில் உலக சமூகம் உறுதியாக இருக்க வேண்டும்.

அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகளை வழங்க உறுதியாக உள்ளோம். பெண்கள் சுகாதாரத்துறை, மற்ற துறைகளிலும் பணிபுரிய முடியும். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இருக்காது.

காபூலில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்களுக்கு முக்கியமானது. எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு வழங்கும் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்’’ என்றார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஆப்கானிஸ்தான் திரும்பினார் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானி பராதர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு