02,Jan 2026 (Fri)
  
CH
சினிமா

நடிகை ஆனந்தியின் ஸ்ரீதேவி சோடா சென்டருக்கு உதவும் மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, சிறு பட்ஜெட் படங்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

தமிழில் கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, கமலி பிரம் நடுக்காவேரி போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஆனந்தி, தெலுங்கிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 

கருணா குமார் இயக்கும் இப்படத்தில் நடிகை ஆனந்தி, கிராமத்தில் சோடா கம்பெனி நடத்தும் பெண்ணாக நடித்துள்ளார். காதலும், காமெடியும் கலந்த படமாக தயாராகும் இதில் சுதீர்பாபு ஹீரோவாக நடிக்கிறார். 

இந்நிலையில், ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ படத்துக்கு பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உதவ முன்வந்துள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்ட் 19-ந் தேதி இப்படத்தின் டிரெய்லரை மகேஷ் பாபு வெளியிட உள்ளார். மகேஷ் பாபு டிரெய்லரை வெளியிட உள்ளதால் ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ படக்குழு உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நடிகை ஆனந்தியின் ஸ்ரீதேவி சோடா சென்டருக்கு உதவும் மகேஷ் பாபு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு