18,May 2024 (Sat)
  
CH
சினிமா

படப்பிடிப்பு நிறைவு.... ரிலீஸ் பிளானை மாற்ற படக்குழு திட்டம்

ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாக்கி உள்ளனர். 

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால், ஆர்.ஆர்.ஆர் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




படப்பிடிப்பு நிறைவு.... ரிலீஸ் பிளானை மாற்ற படக்குழு திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு