06,May 2024 (Mon)
  
CH
சினிமா

மகான் ஆக மாறிய விக்ரம் வைரலாகும் போஸ்டர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தை இதுவரை ‘சியான் 60’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மகான் ஆக மாறிய விக்ரம் வைரலாகும் போஸ்டர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு