ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ருசியான உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் இன்று எரிசேரி ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேனைக்கிழங்கு - 100 கிராம்
நேந்திரங்காய் - ஒன்று
கறிவேப்பிலை - தேவைக்கு
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - 25 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கு
செய்முறை:
சேனையையும், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு கறிவேப்பிலை, மிளகு தூள், உப்பு, தேங்காய் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவையுங்கள்.
கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.
மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெயை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.
நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..