30,Apr 2024 (Tue)
  
CH
சினிமா

திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா

பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் ‘பிக்கப்’. இப்படத்தில் இவர்களுடன் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்கள்.

இப்படம் குறித்து கூறும் பவர்ஸ்டார் சீனிவாசன், ‘இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு "வைரல் ஸ்டார்" என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்". என்றார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு