20,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டன

சென்னையில் நேற்று 31 ஆயிரத்து 636 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் பதிவாகி உள்ளது. மணலியில் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

சென்னையில் மாநகராட்சி பள்ளிகள், சுகாதார வளாகங்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பூசி மையங்களாக செயல்பட்டன. 15 மண்டலங்களுக்குட்பட்ட 65 மையங்களும், 15 நகர்ப்புற சுகாதார மையங்களும் தடுப்பூசி மையமாக செயல்பட்டது.

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளில் செயல்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்பட்ட தடுப்பூசி முகாம்கள் இனி அங்கு செயல்படாது. பள்ளிகள் திறப்பதால் அந்த மையங்கள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

200 புதிய தடுப்பூசி மையங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்படும். தடுப்பூசி மையங்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் தனியார் கட்டிடங்களில் செயல் படுகின்ற மையங்களுக்கு மக்கள் செல்ல தயங்குகிறார்கள். தடுப்பூசி போடுவது குறித்த சரியான தகவல் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

சென்னையில் நேற்று 31 ஆயிரத்து 636 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் பதிவாகி உள்ளது. மணலியில் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு