மறைந்த இயக்குனர் கே.பி.பிள்ளை உடலுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மலையாள திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் கே.பி.பிள்ளை. இவர் முதலில் ராணுவத்தில் பணிபுரிந்தார். 21 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற அவர், அதன்பிறகு 1968-ம் ஆண்டில் மலையாள நாடகங்களை நடத்தினார். பின்பு 1970-ம் ஆண்டு சினிமா துறையில் கால்பதித்தார்.
முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், 1974-ம் ஆண்டில் “நகரம் சாகரம்” என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு “பாதிரா சூரியன்”, “பிரியசகி”, “பணிதீராத வீடு” உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கினார். 1981-ம் ஆண்டில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்துவந்த அவர், நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..