28,Mar 2024 (Thu)
  
CH
சமையல்

வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை

இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஆரோக்கியமான வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை செய்து இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 200 கிராம்,

கேரட்- 2

பீன்ஸ் - 100 கிராம்,

குடைமிளகாய் - ஒன்று,

இஞ்சி - ஒரு சிறிய துண்டு,

பச்சை மிளகாய் - 2,

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

எண்ணெய் - 50 மில்லி,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கேரட், பீன்ஸ், இஞ்சி, ப,மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அவை சிறிது வதங்கியவுடன கேரட், குடைமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

ஒரு பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும்.

இந்தக் கலவை நன்கு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

அருமையான சுவையில் வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை தயார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு