சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளோம். சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.
இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..