தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 டீஸ்பூன்
கேரட், கோஸ், பீன்ஸ், பருப்பு - 1 கப்
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைபோட்டு வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கவும்.
இதை காலையில் உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். உடலுக்கும் மிகவும் நல்லது. சற்று தண்ணீராக இருந்தால் தான் இது நன்றாக இருக்கும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு வெஜிடபிள் சூப் ரெடி.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..