25,Apr 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

தினந்தோறும் திருமாலின் நாமங்கள்

விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதை, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:-

சாப்பிடும் பொழுது ‘கிருஷ்ணா’ என்றும், படுக்கச் செல்லும் பொழுது ‘பத்மநாபா’ என்றும், யுத்தத்தின்போது ‘சக்ரதாரி’ என்றும், வெளியே கிளம்பும் பொழுது ‘திரிவிக்ரமா’ என்றும், கெட்ட கனவு கண்டால் ‘கோவிந்தா, கண்ணா’ என்றும், காட்டு வழியில்செல்லும்பொழுது ‘நரசிம்மா’ என்றும், சுபகாரியப் பேச்சு நடக்கும்பொழுது ‘நாராயணா’ என்றும், மருந்து உண்ணும் பொழுது ‘மகா விஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக ‘மாதவா’, ‘கேசவா’ என்றும் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு உச்சரித்தால் ‘உரு’ ஏறத் திரு ஏறும் என்பது போல காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கண்ணபிரானை புரட்டாசி மாதச் சனியில் வழிபட்டு பொன்னான வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தினந்தோறும் திருமாலின் நாமங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு