05,Dec 2024 (Thu)
  
CH
சினிமா

முடியை புற்றுநோயாளிகளுக்கு தானமாக கொடுத்த விக்ரம் மருமகன்

விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது மகன் துருவ் விக்ரமும் ‘ஆதித்ய வர்மா’ படம் மூலம் ஹீரோ ஆகிவிட்டார். தற்போது விக்ரமுடன் ‘மகான்’ படத்திலும் நடித்துள்ளார். 

இதேபோல் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்துக்காக 4 வருடம் வளர்த்த முடியை, நடிகர் அர்ஜுமன் ஒரு காட்சிக்காக வெட்டி உள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவர் முடியை வெட்டி உள்ளனர். வெட்டப்பட்ட முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜுமன். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




முடியை புற்றுநோயாளிகளுக்கு தானமாக கொடுத்த விக்ரம் மருமகன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு