26,Apr 2024 (Fri)
  
CH
சினிமா

சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் பட நடிகர்

சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்கிறார். 

ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகர் சித்திக், சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் திரிஷ்யம், ஹே ஜூடு, ஒடியன் போன்ற மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் பட நடிகர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு