21,Nov 2024 (Thu)
  
CH
ஆரோக்கியம்

மருந்து இல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வழிகள்

ரத்த அழுத்தத்தை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது முக்கியம். மருந்துகளின் தேவை இல்லாமல் இயற்கையாகவே ரத்த அழுத்த பிரச்சினையை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

ரத்த அழுத்தம் குறைவது மற்றும் ரத்த அழுத்தம் உயர்வது போன்ற பிரச்சினையை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது முக்கியம். ஏனெனில் அவை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிகுறிகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அவற்றுள் தலைவலி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல், மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மருந்துகளின் தேவை இல்லாமல் இயற்கையாகவே ரத்த அழுத்த பிரச்சினையை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

* வஜ்ராசனம், மலாசனம், தண்டாசனம், விருக்‌ஷாசனம் போன்ற யோகாசனங்கள் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுப்படுத்தக்கூடியவை. இவை தொடக்க நிலை ஆசனங்கள் என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்துவிடலாம்.

* உப்பில் உள்ளடங்கி இருக்கும் சோடியம் இயற்கையாகவே ரத்த அழுத்த அளவை அதிகரிக்கக்கூடியது. ஒரு டம்ளர் நீரில் சிறிதளவு உப்பு கலந்து பருகினால் ரத்த அழுத்தத்தில் அதன் தாக்கம் பிரதிபலிக்கும். அதனால் உப்பை அதிகம் உபயோகிக்கக்கூடாது.

* ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவது ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிமுறையாகும். ஏனெனில் நீரிழப்புதான் குறைந்த ரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதுடன் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும் முடியும்.

* அபான வாயு முத்திரை பயிற்சி செய்வதும் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். மோதிர விரலின் நுனி பகுதியும், நடு விரலின் நுனி பகுதியும், பெருவிரலின் நுனி பகுதியை தொடும்படி வைக்க வேண்டும். பின்பு ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைக்க வேண்டும். கட்டை விரலை நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையிலேயே சிறிது நேரம் வைத்திருந்து பயிற்சி செய்ய வேண்டும். இந்த முத்திரையை குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது செய்வது சிறந்த பலனை தரும். நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.

* பிராணாயாமம் என்பது யோகா பயிற்சியின் ஒரு அங்கமான மூச்சு பயிற்சியாகும். ஹைப்பர்டென்ஷன் எனப்படும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும்.

* உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்டென்ஷன் போன்ற பிரச்சினைகளுக்கு மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளில் சிறிது நேரம் ஈடுபடுவது குறைந்த ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.

* ஊட்டச்சத்துக்கள் கொண்ட சமச்சீரான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கியம். ரத்த அழுத்தத்தைக் குறைக்க சரியான நேரத்தில் சரியான உணவை உண்ணுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செய்யும்போது உடல் தோரணை சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். இவை அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனையின்படி செய்வது அவசியம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மருந்து இல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வழிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு