நோயுள்ளவர்கள் மட்டும் மாஸ்க் போடுங்கள் என்றார்கள். போட்டோம்.
பிறகு எல்லோரும் மாஸ்க் போடுங்கள் என்றார்கள். எல்லோரும் போட்டோம்.
ஒரு மாஸ்க் இரண்டு மாஸ்க் ஆனது. அதையும் போட்டோம்.
கையை கழுவ சொன்னார்கள் கழுவினோம்.
ஒரு மீற்றர் தூரம் இடைவெளி விட சொன்னார்கள். விட்டோம்.
பிறகு இரண்டு மீற்றர் என்றார்கள். அதனையும் விட்டோம்.
தடுப்பூசி கண்டுபிடித்தால் எல்லாம் சுபமே என்றார்கள். நம்பினோம்.
பிறகு ஒரு தடுப்பூசி போதாது. இரண்டு வேண்டும் என்றார்கள். போட்டுக் கொண்டோம்.
இப்போது இரண்டு போதாது. மூன்று வேண்டும் என்கிறார்கள். குத்தித் தொலையுங்கள் என்றோம்.
தடுப்பூசி போடுபவரும் இறக்கிறார்கள். போடாதவர்களும் இறக்கிறார்கள். ஏன் என்று கேட்டோம்?
புள்ளி விபரத்தை காட்டினார்கள்.
புள்ளி விபரத்தில் இறக்கின்றவர்கள் யார் என்று கேட்டோம்?
நாட்பட்ட நோய் உடையவர்கள், வயதானவர்கள் என்றார்கள்.
திடகாத்திரமான இளைஞர்களும், நாட்பட்ட நோய் இல்லாதவர்களும் ஏன் இறக்கின்றார்கள் என்று கேட்டோம்.
நீ மருத்துவரா? நான் மருத்துவரா? வாயை மூடு என்கிறார்கள்.
தடுப்பூசி போடாதவர்களால் ஆபத்து என்றார்கள். நம்பினோம்.
இப்போது தடுப்பூசி போட்டவர்களாலும் ஆபத்து என்கிறார்கள். நம்பியே ஆக வேண்டும்.
வேறு வழி. நாம் என்ன நிபுணர்களா?
நிபுணர்களும் வந்தார்கள்.
14 நாட்கள் பூட்டுங்கள். நாடு கட்டுக்குள் என்றார்கள்.
பூட்டினார்கள். ஜட்டி போய் கோவணம் வந்தது.
14 நாட்கள் போதாது. 21 நாட்கள் ஆக்குங்கள் என்றார்கள்.
ஆக்கினார்கள். மூன்று வேளை சாப்பாடு இரண்டு வேளை ஆனது.
21 நாட்கள் 30 நாட்கள் ஆகி இப்போது 45 நாட்களும் ஆகி விட்டது.
நாட்டின் குடிமகன் எல்லாம் இழந்து கோவணத்தோடு நிற்கிறான்.
கொரோனா மட்டும் ஒழியவில்லை.
எத்தனை பேருக்கு இரண்டு வேளை சாப்பாடு ஒரு வேளை ஆனது தெரியவில்லை.
எத்தனை பேருக்கு ஒரு வேளை சாப்பாடும் இல்லாது போனது தெரியவில்லை.
பிள்ளைகள் பாடசாலை பெயரையும் மறந்து விட்டார்கள்.
பூட்ட சொன்ன நிபுணர்கள் இப்போது காணாமல் போய் விட்டார்கள்.
மாத சம்பளம் எடுக்கும் அரச ஊழியர்கள் தெருவில் ஊர்வலம் வருகிறார்கள்.
அவர்களின் கணக்கில் இன்றுவரை துண்டு எதுவும் விழவில்லை.
எதிர்காலத்தில் அதுவும் நிச்சயமில்லை.
புதுயுக நிபுணர்கள் 2,000 ரூபாவில் ஒரு குடும்பம் வாழ்வது எப்படி என்று வகுப்பு எடுக்கிறார்கள்.
நாம் ஓட்டு போட்டவர்களோ அந்நிய நாட்டு ஜட்டியை ஏன் அணிய வேண்டும் என்று பொங்குகிறார்கள்?
ஆட்டின் தலையை வெட்டி பானையை எடுத்தார்கள். ஆடு இறந்து விட்டது.
பிறகு பானையை உடைத்து ஆட்டின் தலையையும் எடுத்தாயிற்று.
இப்பொழுது பானையும் இல்லை.
மக்களின் நிலை இன்று.
ஐயோ சாமி, பிச்சை வேண்டாம் முதல்ல நாயைப் பிடி.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..