தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை பட்டாணி - 1 கப்,
பெரிய வெங்காயம் - 2.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா - 1 கட்டு,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
பச்சை மிளகாய் - 5,
சோம்பு - அரை டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு - 6,
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.
சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..