2021 ஒக்டோபர் முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த டி சில்வா தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும்.
- முதல் கட்டம்: ஒன்று - ஐந்தாம் வகுப்பு வரை 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்
- இரண்டாம் கட்டம்: 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்
- மூன்றாம் கட்டம்: சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகள்
- நான்காம் கட்டம்: நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என்றார்.
இதேவேளை, நவம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அந்த வகையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் முடிந்தவுடன் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மூத்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..