சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துபோகும் பிரச்சினை ஏற்படும். அவர்கள் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தியே இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
நகங்களை சுற்றி இருக்கும் தோல் பகுதி சிலருக்கு உறிந்துகொண்டே இருக்கும். சிலருக்கு நகம் உடைந்துபோகும் பிரச்சினை உண்டு. வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தியே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
நகங்களின் பக்கவாட்டில் ஏற்படும் சரும உதிர்தலுக்கு பப்பாளி, அன்னாசி பழங்களை பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் அன்னாசி பழ ஜூஸுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பப்பாளி சாறை கலந்து கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை ஒரு டேபிள்ஸ்பூன் வினிகரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையுடன் பழ கூழை கலந்து நகங்களின் சுற்றுப்புற பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நகங்களின் சுற்றுப்புற பகுதி மென்மையாக மாறிவிடும். நகமும் பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும். சரும உதிர்வு பிரச்சினையும் ஏற்படாது.
நகங்கள் உடைந்துபோவதை தடுக்கவும் முட்டையின் மஞ்சள் கருவை உபயோகப்படுத்தலாம். அரை கப் தேனுடன், அரை கப் விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள்கரு, ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு ஆகியவற்றை கலந்து பாட்டிலில் ஊற்றிவைக்க வேண்டும். அதனை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு நகங்களில் தடவி வந்தால் நகம் உடைதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தியும் நகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். எலுமிச்சை பழத்தின் தோல் பகுதியையும் நகங்களில் தடவி வரலாம். அதற்கு நகம் உடைதல், நகவெடிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..