பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால் எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வராது என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கணித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மேக் மாஸ்டர் கூறியதாவது:
பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருப்பதுடன், அவர்களை வளர்த்துவிடும் செயல்களை செய்து வருகிறது.
எவ்வளவோ சொல்லியும் பாகிஸ்தான் திருந்தியது போல் இல்லை.
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளுடன் அமெரிக்கா கடந்த காலங்களில் ஏராளமாக உதவியது. ஆனால் டிரம்ப் ஆட்சி காலத்தில் இந்த உதவிகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டன. பைடன் ஆட்சியிலும் உதவிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அமெரிக்க உள்ளிட்ட எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வராது.
அதையும் மீறி பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பணிகளை செய்தால், பாகிஸ்தான் மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்படும்.
பாகிஸ்தான் தனது நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இதுபோன்ற தவறுகள் செய்வதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..