பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள் வீட்டினுள் இருக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது, அதனை நீக்குவது மற்றும் அணிந்து கொண்டு இருப்பது போன்ற விடயங்களை பழக்கப்படுத்துவதில் பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுஇ கடந்த முறைஇ சில வாரங்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் முகக் கவசம் அணிந்து கொண்டிருப்பதை பெரிதும் விரும்பவில்லை. எனவே முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தெளிவவுபடுத்த வேண்டும் என்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா மேலும் கேட்டுக்கொண்டார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..