15,Jan 2025 (Wed)
  
CH
ஆன்மிகம்

ஆண்டி கூட குபேரன் ஆகலாம் இந்த மந்திரத்தை சொன்னால்...

புரட்டாசி மாதத்தில் பெருமாளுடைய இந்த மந்திரத்தை தினமும் காலையில் உச்சரித்தால் ஆண்டி கூட குபேரன் ஆகலாம் என்பது ஆகம விதி. அந்த மந்திரம் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் எவ்வளவு அவசரமாக வேலைக்கு கிளம்புபவர்களாக இருந்தாலும் சரி, ஒரு 5 நிமிடம் இந்த மந்திரத்தை பூஜை அறையில் பெருமாள் படம் முன்பு அமர்ந்து உச்சரித்து விட்டு செல்லுங்கள். இதனால் உங்களுடைய மனமும் அமைதி பெறுவதை நீங்களே உணர்வீர்கள். பணக்காரனாக வேண்டும் என்பதற்காக இந்த மந்திரத்தை உச்சரிக்காதீர்கள்! பெருமாளுடைய ஆசீர்வாதம் கிடைக்கவும், வீட்டில் சுபீட்ச நிலை நீடிக்கவும் வேண்டிக் கொண்டு மனமார உச்சரிக்க வேண்டும்.


ஓம் நிரஞ்சனாய வித்மஹே!

நிராபாஸாய தீமஹி!

தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!!


நம்முடைய ஜாதகப்படி கிரக அமைப்புகள் சரியில்லை என்றாலும், தொடர்ந்து கஷ்ட நிலை இருந்தாலும், தொழில் மற்றும் வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இருக்கின்ற பிரச்சனைகள் அகலவும், உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கவும் இந்த மந்திரத்தை தினமும் காலையில் புரட்டாசி மாதத்தில் உச்சரிக்கலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி பெருமாள் மீது முழு பக்தி கொண்டவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் மிக விரைவாக உங்கள் வாழ்க்கை தரம் உயர்வது நிச்சயம்.

ஒரு முறை அந்த குபேரனுக்கு செல்வத்தை இழக்கும் அபாயம் வந்ததாம். அப்போது அவர் இந்த பெருமாள் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தாராம். அவர் இழக்க இருந்த அத்தனை செல்வங்களும் பத்திரமாக அவருக்கு திரும்பி கிடைத்ததாம். செல்வத்தை இழக்கும் தருவாயில் பெருமாள் காயத்ரி மந்திரம் உச்சரித்து வருபவர்களுக்கு ஆகச்சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்களும் தினமும் உச்சரித்து பயனடையுங்கள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஆண்டி கூட குபேரன் ஆகலாம் இந்த மந்திரத்தை சொன்னால்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு