கவிஞர் வைரமுத்து, டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து, டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில், “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” என பதிவிட்டுள்ளார்
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..