05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் ஒரு நாடு ஒரே சட்டம்

கொழும்பு: இலங்கையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க சர்ச்சைக்குரிய புத்த துறவி தலைமையில் 13 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார்.

அண்டை நாடான இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 24ல் மூன்று சர்ச்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் இறந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இலங்கையில் செயல்படும் அமைப்பே காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து 'இலங்கையில் 'ஷரியத்' சட்டத்தை பின்பற்றுவதை தடை செய்ய வேண்டும். ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் இலங்கையில் 2019ல் நடந்த அதிபர் தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவோம்' என கோத்தபய ராஜபக்சேவும் அவரது எஸ்.எல்.பி.பி. எனப்படும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியும் வாக்குறுதி அளித்தன.பெரும்பான்மையான புத்த மதத்தினரின் ஓட்டுகளை பெறும் நோக்கில் இந்த கோஷம் முன் வைக்கப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதிபராக கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். எஸ்.எல்.பி.பி. கட்சி ஆட்சியை பிடித்தது. பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவியேற்றார்.

இந்நிலையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க 13 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார். இக்குழுவின் தலைவராக சர்ச்சைக்குரிய புத்தமத துறவி ஞானசரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் 2013ல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஞானசராவின் பி.பி.எஸ். எனப்படும் 'போடு பால சேனா அமைப்பு' தான் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே அதிபர் அமைத்துள்ள 13பேர் அடங்கிய சிறப்பு குழுவில் நான்கு முஸ்லிம் அறிஞர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் தமிழர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இலங்கையில் ஒரு நாடு ஒரே சட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு