கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற நடைமுறையை அக்டோபர் 11 முதல் இங்கிலாந்து அரசு அமல்படுத்தியது.
கொரோனா பரவல் அச்சத்தால் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளையும் இங்கிலாந்து அரசு சிவப்பு பட்டியலில் வைத்திருந்தது. அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வர்த்தக ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்காக அந்த நாடுகளின் பெயர்களை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் சிவப்பு பட்டியலில் இருக்கும் 7 நாடுகளின் பெயர்களும் நீக்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..