06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை இந்தியாவில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதேபோல அமெரிக்காவில் பணி நிமித்தமாக ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களும் நேற்று தீபாவளியை கொண்டாடினர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது மனைவியும் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

மேலும் அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

ஜோ பைடன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்” என தெரிவித்து உள்ளார்.

ஜோ பைடன் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதே போல துணை அதிபர் கமலா ஹாரிசும் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நம் தேசத்தின் மிகவும் புனிதமான மதிப்புகளை நினைவூட்டி, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபத் திருநாளாம், தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு