வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மெக்சிகோ, சால்கோ நகராட்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் போனதால், எதிரே சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதியது. இதில், பின்புறம் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் சிக்கி சரக்கு லாரி ஓட்டுனர் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்தில், சில வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..