12,May 2024 (Sun)
  
CH
ஆன்மிகம்

இன்று மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்

தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13.11.2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.

பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4-ம் நாள் சனிக்கிழமை 20.11.2021 அன்று இரவு 11.31 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13.11.2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.

நவகிரகங்களில் முழுச் சுபரான குருபகவானுக்கு மட்டுமே தன் பார்வை பலத்தால் அனைத்தையும் வளம் பெறச் செய்யும் சக்தி உள்ளது. குரு தான் நின்ற இடத்தை விட பார்த்த இடத்தை புனிதப் படுத்துவார். குரு பார்த்த இடம் கோடி நன்மை பெறும்.

தன் பார்வை பலத்தால் அனைத் தையும் கட்டுப்படுத் தும் சக்தி படைத்த ஒரே ராஜகிரகம் குருபகவான் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை. அது மட்டுமல்ல குருபகவான் மட்டுமே பணம், திருமணம், புத்திர பாக்கியம், தொழில், உத்தியோக உயர்வு என பாக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் விருத்தியாக்கும் சக்தி படைத்தவர் என்பதால் தான் மக்களுக்கு குருப்பெயர்ச்சியின் மேல் அதீத ஈடுபாடு உள்ளது.

அதன்படி குருவின் பார்வை பதியும் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசியினரும், தன லாப ஸ்தானத்தில் நிற்கும் மகரம், மேஷ ராசியினரும் ஏதாவது ஒரு வகையில் மேன்மை அடைவார்கள். மற்ற ராசிகளுக்கு தான் நின்ற வீட்டிற்கு ஏற்பவும் தான் பயணம் செய்யும் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் ரீதியாகவும் சுய ஜாதக ரீதியான தசாபுத்திக்கு அடிப்படையிலும் குரு நற்பலன்களை வழங்குவார்.

அவரவரின் தசாபுத்தியை சாதகப்படுத்தும் வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். ஒரு ராசியில் தோராயமாக ஓராண்டு சஞ்சரிக்கும் குருபகவான் மகரம், கும்பம் என்ற இரண்டு ராசிகளிலும் வக்ரம், அதிசாரம் என மாறி மாறி கடந்த ஒரு வருடமாக சஞ்சாரம் செய்தார்.

தற்போது கும்பத்தில் 5 மாதங்கள் மட்டுமே சஞ்சரிக்கப் போவதால் எந்த ராசியினருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறலாம். ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குச் செல்கிறார். ராகு மேஷத்திற்கும் கேது துலாத்திற்கும் செல்வதால் பல பெரிய நல்ல மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படப்போவது உறுதி. எனவே இந்த குறுகிய காலத்தை சிறிய எளிமையான இறைவழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் கடக்க முடியும்.

மேலும் இந்த காலகட்டத்தில் சனி பகவான் மகரத்திலும், ராகு பகவான் ரிஷபத்திலும் கேது பகவான் விருச்சிகத்திலும் உலாவும் கிரக அமைப்பைப் பொறுத்தும் இந்த குருப்பெயர்ச்சி புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த குருப் பெயர்ச்சி அனைவருக்கும் விரும்பிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்திட பிரபஞ்சத்தையும் நவகிரகங்களையும் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யலாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இன்று மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு