30,Jan 2026 (Fri)
  
CH
ஆரோக்கியம்

புற்றுநோய்களுக்கு எதிராக செயலாற்றும் செர்ரி பழம்

கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியா மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப்பு பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்வோம்.

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். இரண்டு சுவைகளுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தவை. புற்றுநோய், முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு.

`மெலடானின்' எனும் சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது. இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோய்த் தடுப்பு பணியை செய்கிறது.

பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளன. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடல் செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும்.

புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சாந்தின், பீட்டாகரோட்டின் போன்ற ஆரோக்கியம் வழங்கும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை. வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியவை.

மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் ‘அசெரோலா’ வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரி பழங்களை விட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ மிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லி கிராம் ‘வைட்டமின் சி’யும், குறிப்பிட்ட அளவில் ‘வைட்டமின் ஏ’யும் உள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




புற்றுநோய்களுக்கு எதிராக செயலாற்றும் செர்ரி பழம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு