28,Nov 2021 (Sun)
  
CH
உலக செய்தி

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதியின் மதிப்பு 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்தது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கு (13 மில்லியன் டாலர்) ஏலம் போனது. பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஆல்பர்ட் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. அப்போது ஏராளமான நபர்கள் பிரதியை வாங்க ஆர்வம் காட்டினர். இறுதியில் அந்த சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி 13 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

சார்பியல் கோட்பாடு நூல் 1913-ம் ஆண்டு மற்றும் 1914-ம் ஆண்டின் முற்பகுதியில் ஐன்ஸ்டீன் மற்றும் மைக்கேல் பெஸ்ஸோ ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 54 பக்க கையெழுத்துப் பிரதி ஆகும்.

முன்னதாக இந்த கையெழுத்துப் பிரதியின் மதிப்பு 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்தது.

"ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு இயற்றிய காலம் பொது சார்பியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாகும். கோட்பாட்டின் நூல்களை ஆவணப்படுத்த எஞ்சி இருக்கும் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் இதுவும் ஒன்றாகும்" என கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு