28,Mar 2024 (Thu)
  
CH
சினிமா

மீண்டும் தமிழில் பாவனா

சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டா, தீபாவளி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார். 

ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பாவனா. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மீண்டும் தமிழில் பாவனா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு