06,Apr 2025 (Sun)
  
CH
சினிமா

நடிகர் அஜித்குமாரின் அறிக்கைக்கு யார் காரணம்? - அஜித் திடீர் அறிக்கை

#BREAKING | தல எனக் குறிப்பிட வேண்டாம் - நடிகர் அஜித் குமார் அதிரடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவரை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தல அஜித் என்று அழைத்து வருகிறார்கள். 

இந்நிலையில் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

அஜித்குமார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்னை இனி ‘தல’ என்றோ அல்லது வேறெந்த அடைமொழியுடனோ குறிப்பிடாமல் அஜித், அஜித் குமார் அல்லது ஏ.கே. என்று மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” - நடிகர் அஜித் குமார்.

#BreakingNews

#tamils4News | #AjithKumar | #AK

#Thala #ActorAjith #TamilCinema


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நடிகர் அஜித்குமாரின் அறிக்கைக்கு யார் காரணம்? - அஜித் திடீர் அறிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு